இரண்டு மாதங்களுக்கு
முன்னொரு நாளிலிருந்து
எங்கள் வீட்டிலொரு
பறவை வசிக்கிறது
பகலில் தூங்கி
இரவில் விழிக்கிற
பறவை அது
பறக்கும்போது
சிக்கிப் பலியாகிவிடுமென்பதால்
காற்றாடியைப்
பயன்படுத்தமாட்டோம்
வழிதவறி
வெளியே சென்றுவிடுமென்று
கதவு ஜன்னல்களைக்
கவனமாகத் தாழிட்டுவிடுவோம்
அதன் எச்சம்
படுவதைத் தவிர்க்க
போர்வைக்குள் ஒளிந்துகொள்வோம்...
அலுவலகம் செல்ல
ஆறுமணிக்கு
எழுந்து குளிக்கிற நண்பன்
அதன் சேட்டைகளைப்பற்றி
நிறையச் சொல்வான்
நான் எழுகின்ற நேரத்தில்
நன்றாக
உறங்கத்தொடங்கிவிடும்
--நாவிஷ் செந்தில்குமார்
நன்றி : கீற்று.காம்
இரண்டாவது வார்த்தையில் இறந்துபோனவன்
1 year ago





8 comments:
அது ஒரு BPO பறவையா.. :)
கவிதை நல்லாருக்கு
நன்றி புபட்டியன்...
அந்தப் பறவை 'குளிர்' என்ற பார்வையில் படித்துப் பாருங்கள்.
:)
குளிருக்கு இப்படி ஒரு உருவகமா? நீங்க சொல்லித்தான் நண்பா புரியுது.. நல்லாயிருக்கு..:-)))
மிக்க நன்றி கார்த்திகைப் பாண்டியன்!
:)
நல்லா இருக்கு..நண்பா. ஆனா இந்த மரமண்டைக்கு மூணு தடவ படிச்சும் 'குளிர்' தோணவே இல்ல..
அப்புறம், எங்க ஊர்ல அந்த பரவ தூங்கவே மாட்டேங்குது மூணு மாசமா..
நன்றி செந்தில்
stunning.. :)
நன்றி செந்தில் ஆறுமுகம் முருகேசன்.
Post a Comment